மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
19 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
22 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
30 minutes ago
புதுச்சேரி: ''புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், முதல்வர் ரங்கசாமி நகரமன்ற தலைவராகி விடுவார'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் சண்முகம் எம்.பி., பேசினார்.புதுச்சேரியில் அ.தி.மு.க., சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், அவர் பேசியதாவது:புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த முடியாமல், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி, ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கியும், அவர் இரண்டு மாதம் அமைச்சராகவே தொடர்ந்தார். ஒரு முதல்வரால், தன் அதிகாரத்தை கூட பயன்படுத்த முடியாமல், மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைமை உள்ளது. புதுச்சேரியை கடந்த 43 ஆண்டுகளாக ஆண்ட காங்., தி.மு.க, என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., கூட்டணி கட்சிகளால், எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. முதல்வர் ரங்கசாமி, 'என்.ஆர்.காங்., தொடங்கப்பட்டதன் நோக்கமே, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு தான்,' என சொல்கிறார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.புதுச்சேரி மக்களை முதல்வர் ரங்கசாமி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதேபோல மாஜி முதல்வர் நாராயணசாமியும், பதவி வகித்த காலத்தில், மாநில அந்தஸ்தை பெற்றுத்தரவில்லை.புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில், பா.ஜ வெற்றி பெற்றால், யூனியன் பிரதேச அந்தஸ்தும் குறைந்து விடும். முதல்வர் ரங்கசாமி நகரமன்ற தலைவராகி விடுவார்.புதுச்சேரியில் வேக வேகமாக, பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. புதுச்சேரியில் பா.ஜ., என்ற ஒரு கட்சி கிடையாது. அந்த கட்சியில் இருப்பவர்கள், காங்., என்.ஆர்.காங்., கட்சிகளில் இருந்து போனவர்கள்தான். பா.ஜ அரசு, மாநில அந்தஸ்து மற்றும் மாநில நிதிக்குழுவில் சேர்ப்பதாக, மக்களை ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
19 minutes ago
22 minutes ago
30 minutes ago