| ADDED : ஜன 20, 2024 05:57 AM
புதுச்சேரி, : கால்நடை மருத்துவமனை உட்கட்டமைப்பு படிப்படியாக மேம்படுத்தப்படும் என, அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்தார்.மாகி பள்ளூரில் புதிதாக கட்டிய கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கால்நடை துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் ரமேஷ் பரம்பத் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாகி மண்டல நிர்வாகி ஷிவ்ராஜ் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். 50 சதவீத மானியத்தில் ஒரு கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேசியதாவது;பால் உற்பத்தியில் புதுச்சேரி தன்னிறைவு அடைவதற்கும், இறைச்சி, முட்டை உற்பத்தியை பெருக்க அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கால்நடை விவசாயிகள் வருமானம் பெருக்கவும், கிராமப்புற மகளிர் மேம்பாட்டை உறுதி செய்வது இத்திட்டங்களின் நோக்கம்.இதுபோன்று பல திட்டங்கள் மாகி பகுதியில் அமல்படுத்தப்படும். சட்டசபையில் உறுதி அளித்தபடி, அனைத்து கால்நடை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்' என்றார்.நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், இணை இயக்குனர் ராஜிவ் உட்பட பலர் பங்கேற்றனர்.