மேலும் செய்திகள்
பெண்கள் கால்பந்தில் சேது அணி அபாரம்.
27-Mar-2025
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மார்ச் 22ம் தேதி துவங்கி மே 25ம் தேதி வரை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவை நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து புதுச்சேரியில் பல லட்ச ரூபாய் சூதாட்டம் பரவலாக நடந்து வருகிறது. இதில் சாதாரண அணி மீது ரூ. 10 ஆயிரம் பந்தயம் வைத்தால் ரூ.4 லட்சம் பரிசுத் தொகை கிடைக்கும். அதுவே பலம் வாய்ந்த அணி மீது ரூ.10 ஆயிரம் பந்தயம் வைத்தால் கூடுதலாக ரூ.7,500 மட்டுமே கிடைக்கும். இதுபோல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஒரே அணியின் மீது வைக்கலாம்.நேற்று முன் தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சி.எஸ்.கே., அணி மீது புதுச்சேரியில் உள்ள பிரபல அரசியல்வாதிகள் மற்றும் சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்ட பலர், தங்கள் அடையாளத்தை மறைத்து பல லட்சம் ரூபாயை பந்தயம் கட்டியிருந்தனர்.இந்நிலையில் சி.எஸ்.கே., அணி 5ம் முறையாக தோல்வியை தழுவியதால், இந்த அணி மீது பந்தயம் கட்டி பல லட்சங்களை இழந்த அரசியல்வாதிகள் வெளியில் சொல்ல முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் பல ஆண்டுகளாக புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதுவரை பெரிய அளவில் யாரும் பிடிப்பட்டதாக தெரியவில்லை. சூதாட்டத்தின் 'புக்கி' (கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்) களாக ஒரு நம்பர் லாட்டரி விற்பவர்களே செயல்படுகின்றனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.10 ஆயிரத்திற்கு ரூ.500 இவர்களுக்கு கமிஷன்.இவர்களிடம் தற்போது பல லட்ச ரூபாய் சர்வசாதாரணமாக புழங்கி வருகிறது. இவர்களை போனில் தொடர்பு கொண்டு எந்த அணி மீதும் பந்தயம் வைக்கலாம். பணத்தை ஆன்லைனில் பெறும் இவர்கள், வெற்றி பெற்றால் சம்மந்தப்பட்ட நபருக்கு அதேமுறையில் பணத்தை அனுப்பிவிடுகின்றனர். இதனால் யார் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.
27-Mar-2025