உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்

பதவி உயர்வுக்கான ஆணை வழங்கல்

புதுச்சேரி: அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் பேக்கர் மஸ்துாராக பணிபுரிந்தவர்களுக்கு பதவி உயர்வுக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் பேக்கர் மஸ்துாராக பணி புரிந்த 26 ஊழியர்களில், 20 பேருக்கு பைண்டர் அசிஸ்டன்டாகவும், 6 ஊழியர்களுக்கு மெஷின் அசிஸ்டன்டாகவும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மேலும், 4 பேருக்கு செக் ஷன் ஹோல்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு செயலர் பத்மா ஜெய்ஸ்வால், இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை