உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க.,வில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

தி.மு.க.,வில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்

புதுச்சேரி: தி.மு.க.,வில் மீண்டும் இணைந்தவர்களுக்கு உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, உருளையன்பேட்டை தொகுதி சங்கோதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் தலைமையில் மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள் மீண்டும் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் கோபால் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில செயலாளர் சிவா எம்.எல்.ஏ., கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றார். தொடர்ந்து, பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு, தொண்டர் அணி துணைத் தலைவர் மதனா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை