உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போஸ்டரில் ஜாதி சண்டை கூடாது காரைக்கால் கலெக்டர் எச்சரிக்கை

போஸ்டரில் ஜாதி சண்டை கூடாது காரைக்கால் கலெக்டர் எச்சரிக்கை

காரைக்கால்: காரைக்காலில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அச்சக உரிமையாளர்களுடன் கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்ட ஆலேசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ளதால் பொது இடங்களில் போஸ்டர் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.போஸ்டர் அடிக்கும் பட்சத்தில் மதம், ஜாதி பிற கட்சிகளை தாக்கிப் பேசுவது போன்றவை போஸ்டரில் இடம் பெறக்கூடாது. ஜூன் 5-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகல் அமலில் உள்ளது. சுவரொட்டிகளிலும் உங்கள் பெயர் மற்றும் விலாசம் இருக்க வேண்டும். எத்தனை போஸ்டர் அடிக்கிறீர்கள் என்ற விபரமும் தேர்தல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். கட்சி தலைவர்களின் விபரங்களும் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை