உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொத்தபுரிநத்தம் - சன்னியாசிக்குப்பம் சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்

கொத்தபுரிநத்தம் - சன்னியாசிக்குப்பம் சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கம்

திருபுவனை: திருபுவனை தொகுதியில் 1.37 கோடி ரூபாயில் 4.5 கி.மீ., துார கொத்தபுரிநத்தம் - சன்னியாசிக்குப்பம் சாலை மேம்பாட்டு பணிகளை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் சார்பில், திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தபுரிநத்தம் முதல் திருபுவனை பிள்ளையார்கோவில் வரை 2.5 கி.மீ., நீளமுடைய சாலை மற்றும் 2 கி.மீ., நீளமுடைய திருபுவனை - சன்னியாசிக்குப்பம் சாலை, குயிலாபாளையம் இணைப்புச் சாலை என, 4.5 கி.மீ., நீளமுடைய சாலை 1 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயில் மேம்படுத்தப்பட உள்ளது.இதற்கான பூமி பூஜை விழா கொத்தபுரிநத்தம் முத்துமாரியம்மன் கோவில் அருகில் நடந்தது. அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணியை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கட்டடங்கள் மற்றும் சாலைகள் (வடக்கு) கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவிப்பொறியாளர் சீனிவாசராம், இளநிலைப் பொறியாளர் தேவந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ