உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிணற்றில் விழுந்தவர் பாதுகாப்பாக மீட்பு

கிணற்றில் விழுந்தவர் பாதுகாப்பாக மீட்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் மகன் ராமர்,23; தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில், அதே பகுதியில் வின்சென்ட் என்பவரின் நிலத்தில் உள்ள 8 அடி அகலம், 60 ஆழம் கொண்ட தரைக்கிணற்றில் தவறி விழுந்தார். ராமனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி எழிலவன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, முன்னணி வீரர் மூர்த்தி, கிணற்றில் இறங்கி, நாற்காலியில் கயிறு கட்டி, ராமரை மேலே கொண்டு வந்தனர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் மூலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை