உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., மகளிர் தின விழா கொண்டாட்டம்

மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., மகளிர் தின விழா கொண்டாட்டம்

வில்லியனுார்: மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., மற்றும் காமாட்சி அம்மாள் அறக்கட்டளை சார்பில், உலக மகளிர் தின விழா நடந்தது. காமாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மோகித் ரவிக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ரேவதிபர்குணன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், மாநில மாணவர் அணி தலைவர் குகன், பாலகிருஷ்ணன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி தலைவி பிரபாவதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் பங்கேற்று பேசியதாவது: முதல்வர் ரங்கசாமி மகளிருக்கு பாதி கட்டணத்தில் பத்திரப்பதிவு, மகளிர் உரிமை தொகை, பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி நாட்டிற்கே முன்னோடியாக இருக்கின்றார். ரவிக்குமாருக்கு சேவை மனதுடன், பணிவு, அன்பு நிறைந்துள்ளதால் அவருடைய லட்சியம் நிச்சயம் நிறைவேறும்' என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிவக்குமார், தங்கராசு, அரிகிருஷ்ணன், மோகன்தாஸ், நடராஜன், இளங்கோ, பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற தொகுதி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஆயிரத்து 700 மகளிருக்கு பரிசுபொருள் வழங்கி வாழ்த்தினர். மகளிர் அணி மகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ