உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ கல்லுாரி மாணவர் மாயம்

மருத்துவ கல்லுாரி மாணவர் மாயம்

புதுச்சேரி : மருத்துவ கல்லுாரிக்கு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்னஞ்சாலை இந்திராகாந்தி நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல்வர்மா, 26; இவர் கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 4ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ராகுல்வர்மா கல்லுாரிக்கு சென்றார். மாலை வரை வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், கல்லுாரி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டனர். அவர் கல்லுாரிக்கு வரவில்லை என தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் ராகுல்வர்மா கிடைக்கவில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ