உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் சிக்னல் பிரிலெப்ட் சாலையில் மெகா பள்ளம்

ராஜிவ் சிக்னல் பிரிலெப்ட் சாலையில் மெகா பள்ளம்

தினசரி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்புதுச்சேரி: நுாறடிச்சாலை ராஜிவ் சிக்னல் பிரிலெப்ட் சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.புதுச்சேரி நுாறடிச்சாலை ராஜிவ் சிக்னலில், ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வழுதாவூர் நோக்கி வரும் வாகனங்கள் செல்லும் அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட் பாதையில் மெகா சைஸ் பள்ளம், பாதாள சாக்கடை மேன்ஹோல், வெட்டப்பட்ட மரத்தின் அடிபாகம் உயரமாக இருப்பதால் அடிக்கடி அங்கு விபத்து ஏற்படுகிறது.கடந்த நவம்பர் மாதம் ரெட்டியார்பாளையம் கிரைம் பிரிவு கான்ஸ்டபிள் அசோக்ராஜ், 43; பிரிலெப்ட் பள்ளத்தில் பைக் சென்றபோது நிலை தடுமாறி பேரிகார்டில் மோதி உயிரிழந்தார். அதன்பிறகு கூட அந்த பகுதியில் ரிப்லெக்டர்கள் ஏதும் வைக்கப்படவில்லை.ப்ரிலெட்டில் உள்ள பள்ளத்தை பொதுப்பணித் துறையினர் மண் கொட்டி சரிசெய்கின்றனர். ஆனால், அவை மழையின்போது கரைந்து விடுகிறது. இதனால் மீண்டும் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. நேற்று முன்தினம் பைக்கில் சென்ற இருவர் தவறி விழுந்து காயமடைந்தனர்.இதனால் பள்ளம் எதிரில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.பிரிலெப்ட் பாதையில் உள்ள பள்ளத்தை மூடியும், மேடாக உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல், மரத்தின் அடிபாகம் பகுதியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ