உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனநலம் பாதித்தவர் மாயம்: போலீஸ் விசாரணை

மனநலம் பாதித்தவர் மாயம்: போலீஸ் விசாரணை

திருக்கனுார் : சோரப்பட்டில் வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் சண்முகம்; கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திகேயன், 47; மனநலம் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், கடந்த 24ம் தேதி கார்த்திகேயன், தந்தை சண்முகத்திடம் செலவிற்கு பணம் கேட்டபோதுதரவில்லை என தெரிகிறது.இதனால், கோபமடைந்து வீட்டில் இருந்து வெளியேறிய கார்த்திகேயன் இதுவரையில் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர், கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல்போன கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி