உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாலை நேர சிற்றுண்டி திட்டம் வரும் 14ம் தேதி துவக்கம்  அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

மாலை நேர சிற்றுண்டி திட்டம் வரும் 14ம் தேதி துவக்கம்  அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை துவக்க விழா நடந்தது.விழாவில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு உடல் சோர்வுடன் செல்லக்கூடாது என்பதற்காக மாலை நேரங்களில் சிறுதானியங்கள் அடங்கிய சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு பள்ளியில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் அத்திட்டம் துவங்கப்பட உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களை பள்ளிக்கு தினமும் எடுத்துச் செல்லும் வகையில் பேக் வழங்க ஆலோசிக்கப்பட்டு, அதனுடன் புத்தகத்தையும் கொண்டு செல்லும் வகையில் தரமான முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப் மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதால், பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை