உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிறந்த நாள் விழாவில் மயங்கி விழுந்த எம்.எல்.ஏ.,

பிறந்த நாள் விழாவில் மயங்கி விழுந்த எம்.எல்.ஏ.,

புதுச்சேரி : பிறந்த நாள் கேக் வெட்டியபோது மயங்கி விழுந்த சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புதுச்சேரி திருபுவனை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., அங்காளன், 55; பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்த நாள். இவரது பிறந்த நாளையொட்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால் அங்காளன் எம்.எல்.ஏ.விற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. காய்ச்சலுடன் பணிகளை மேற்கொண்டு வந்தார்.இந்த நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு, செல்லிப்பட்டில் உள்ள தனது வீட்டில், ஆதரவாளர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டினார்.அப்போது திடீரென மயக்கம் வருவதாக கூறி, அங்காளன் எம்.எல்.ஏ., தரையில் அமர்ந்தார். உடனடியாக அவரது ஆதரவாளர்கள் அங்காளன் எம்.எல்.ஏ.வை காரில் அழைத்துச் சென்று லட்சுமிநாராயணன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த நாளில் அங்காளன் எம்.எல்.ஏ., மயங்கி விழுந்த தகவல் தெரிந்து, சபாநாயகர் செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை