உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எம்.எல்.ஏ., நிதி வழங்கல்

புதுச்சேரி : ஆட்டுப்பட்டியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த அதிர்வில், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.புதுச்சேரி,உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஆட்டுப்பட்டியில், உப்பனாறு வாய்க்காலை ஒட்டி இருந்த மாடி கட்டடம் சமீபத்தில் சரிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வில், அருகில் இருந்த எட்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.இதையறிந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார். அப்போது, அதிக மற்றும் குறைந்த அளவிலான பாதிப்புகள், என மாறுபட்ட அளவில் வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து பாதிப்பிற்கு ஏற்றார் போல, 18 வீடுகளுக்கு, மொத்தம், 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார்.இதைப்பெற்றுக்கொண்ட அனைவரும் ஆட்டுப்பட்டியில் அடுக்கு மாடி குடியிருப்பு வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.அதற்கு, இதுதொடர்பாக முதல்வரிடம் சென்று, மீண்டும் வலியுறுத்துவோம் என, தெரிவித்தார். தி.மு.க., நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நோயல், சந்துரு உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி