உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுடுகாட்டுப் பாதை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சுடுகாட்டுப் பாதை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

திருபுவனை : திருபுவனை தொகுதி, வம்புப்பட்டு சுடுகாட்டுப் பாதையை ரூ.16.70 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பரிந்துரையின் பேரில் ஆதி திராவிடர் மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் சார்பில், வம்புப்பட்டு சுடுகாட்டுப் பாதை ரூ.16.70 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிக்கான துவக்க விழா நடந்தது.அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் நலத்துறை செயலர் கேசவன், ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், ஆதி திராவிடர் வரைநிலை மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார், செயற்பொறியாளர் பக்தவச்சலம், பொது மேலாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி