| ADDED : பிப் 22, 2024 11:41 PM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிேஷக விழாவில், ஏளானமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கருவடிக்குப்பம் சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இவ்விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன், முதல் கால யாக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை, மகா பூர்ணாஹீதியை தொடர்ந்து, 9:45 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விநாயகர், முருகன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 10:45 மணிக்கு அம்மன் கோபுர கலசத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை நடந்தது. கும்பாபிேஷக விழாவில், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.