உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெட்டப்பாக்கம் பள்ளி இடமாற்றம்

நெட்டப்பாக்கம் பள்ளி இடமாற்றம்

புதுச்சேரி : நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி புனரமைப்பு பணி காரணமாக வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி புதுப்பிக்கப்பட உள்ளது. புதுப்பிக்கும் பணி நிறைவடையும் வரை, பள்ளியில் உள்ள எல்.கே.ஜி., முதல் இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அவர்களின் ஆசிரியருடன் கரியமாணிக்கம் அரசு நடுநிலைப் பள்ளிக்கும், மூன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களுடன் பண்டசோழநல்லுார் அரசு நடுநிலைப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி புனரமைப்பு பணி முடியும் வரை மேற்கண்ட பள்ளிகளில் செயல்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை