உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்காலயா மோட்டார்சில் புதிய கார் அறிமுகம்

சங்காலயா மோட்டார்சில் புதிய கார் அறிமுகம்

புதுச்சேரி, : புதுச்சேரி, சங்காலயா மோட்டார்சில் எக்ஸ்.யூ.வி-3 எக்ஸ்.ஓ., ரெவாக்ஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்டியார்பாளையம் சங்காலயா மோட்டார்சில் நடந்த விழாவிற்கு நிர்வாக இயக்குநர் துரைராஜ் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக், பொதுமேலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். புதிய காரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் அறிமுகப்படுத்தினார். விழாவில், சங்காலயா மோட்டார்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். காரின் சிறப்புகள் குறித்து பொதுமேலாளர் ராஜேந்திரன் கூறுகையில், எக்ஸ்யூவி 3 எக்ஸ்ஓ ரெவாக்சில் இரண்டு இன்ஜின் ஆப்சன் உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.8.94 லட்சம் முதல் ரூ.12.94 லட்சம் வரை உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பேனரோமிக்ஸ் சன்ரூப், லெதரெட் பிளாக் சீட், பிளாக் அலைவ் வீல் மற்றும் ஸ்டேரிங் மோடு ஆடியோ கன்ட்ரோல் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி