உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காவல் துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம்  அறிவிப்பு

காவல் துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம்  அறிவிப்பு

புதுச்சேரி : குடியரசு தினவிழாவிற்கான ஜனாதிபதி பதக்கம், கவர்னர் பதக்கம் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.குடியரசு தினவிழாவில் அசாதாரண சேவைக்கான காவல் பதக்கம், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., ரச்சனா சிங், இசைக்குழு சப் இன்ஸ்பெக்டர் சாந்தப்பன், கிழக்கு போக்குவரத்து ஏட்டு மணிகண்டன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கவர்னர் பாராட்டு சான்றிதழை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெகடர் சத்யா, மோப்ப நாய் பிரிவு ஏட்டு ராஜேந்திரன், காரைக்கால் கடலோர பிரிவு சிறப்பு நிலை ஏட்டு முருகதாஸ், புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளி காவலர் ராமராஜா, காரைக்கால் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெறுகின்றனர்.இதேபோல் சுதந்திர தினம், குடியரசு தின விழாவில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024ம் குடியரசு தின விழாவையொட்டி, ஜனாதிபதி பதக்கம் போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி., அனிதாராய், தெற்கு எஸ்.பி., வீரவல்லவன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை உள்துறை சார்பு செயலர் ஹிரண் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்