மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago
புதுச்சேரி: எல்லை சிவக்குமார் எழுதிய 'புதுச்சேரியில் சமூக நீதிக்குரல்' நுால் வெளியீட்டு விழா ஹோட்டல் சற்குருவில் நேற்று நடந்தது.விழாவிற்கு, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். பாலகங்காதரன், விவேகானந்ததாசன், முனிசாமி முன்னிலை வகித்தனர். துரை செல்வம் வரவேற்றார்.காமராஜர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் அன்புச்செல்வன் நுால் அறிமுக உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் 'புதுச்சேரியில் சமூக நீதி குரல்' நுாலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.ராமன், தனராமன், தாமோதரன், தங்க மணிமாறன், ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சேது செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.நுால் ஆசிரியர் எல்லை சிவக்குமார் ஏற்புரை வழங்கினார். ஓவியர் சக்தி குருநாதன் நன்றி கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago