உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காரைக்கால் மீனவர்கள் கைது ஓம்சக்தி சேகர் கண்டனம்

 காரைக்கால் மீனவர்கள் கைது ஓம்சக்தி சேகர் கண்டனம்

புதுச்சேரி: இலங்கை கடற்படையால், காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில செயலாளர் ஓம் சக்திசேகர் அறிக்கை; காரைக்கால், மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புத்தாண்டை மகிழ்ச்சியுடன் தொடங்கிய வேளையில், மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று, உரிய நடவடிக்கை எடுத்ததால், அவர் இருந்த காலகட்டத்தில் பிரச்னைகள் கட்டுக்குள் இருந்தன. இலங்கையில் புயல், பெருமழையால் பேரழிவு ஏற்பட்டபோது, இந்தியா உடனே நிவாரண உதவிகளை வழங்கியது. இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை கைது செய்து, நம் நாட்டின் நட்பை துச்சமாக கருதி இருப்பது கண்டனத்திற் குறியது. முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை காரைக்காலுக்கு அனுப்பி, கைதான மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும். பிரதமர் மற்றும் வெளிளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை