உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தன்னார்வல ஆசிரியர்களுக்கு ஒரு நாள் அறிமுகப் பயிற்சி

தன்னார்வல ஆசிரியர்களுக்கு ஒரு நாள் அறிமுகப் பயிற்சி

புதுச்சேரி, : உல்லாஸ் - தன்னார்வல ஆசிரியர்களுக்கான ஒரு நாள் அறிமுகப் பயிற்சி நடந்தது.புதுச்சேரி பள்ளி கல்வித் துறையின் மாநில பயிற்சி நிறுவனத்தின் கீழ் மாநில எழுத்தறிவு மையம் இயங்கி வருகின்றது. இம்மையத்தின் சார்பில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்குக் கல்வி அளிக்கும் உல்லாஸ் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.இந்த மையத்தில் இணைந்துள்ள தன்னார்வல ஆசிரியர்களுக்கான ஒரு நாள் உல்லாஸ் அறிமுகப் பயிற்சி லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் சுகுணா சுகிர்த பாய் நோக்கவுரையாற்றினார். வட்டம் மூன்றின் பள்ளித் துணை ஆய்வாளர் லிங்கசாமி வாழ்த்தி பேசினார். ஆசிரியர் பாரதிராஜா தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் சுரேந்தர், சசிக்குமார் ஆகியோர் திட்டத்தின் நோக்கம், இணைய வழி கற்றல் பொருள்கள், உல்லாஸ் செயலி குறித்து கலந்துரையாடினார். 145 தன்னார்வல ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இத்தன்னார்வல ஆசிரியர்கள், சார்ந்திருக்கும் பகுதியில் உள்ள கல்லாதவர்களைக் கண்டறிந்து இத்திட்டத்தில் இணைத்துக் கல்விப் புகட்டுவர் இத்திட்டத்தில் சேர விரும்பும் கல்லாதவர்களும் அருகில் உள்ள அரசுத் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி தங்களை இணைத்துக் கொள்ளலாம். விரிவுரையாளர் சிவசங்கரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை