உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்னை மருத்துவமனையில் எதிர்கட்சி தலைவர் அனுமதி

சென்னை மருத்துவமனையில் எதிர்கட்சி தலைவர் அனுமதி

புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் காரணமாக, எதிர்கட்சி தலைவர் சிவா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த சில நாட்களாக, எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். பின், காய்ச்சலாலும், உடல் வலியாலும் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.தற்போது காய்ச்சல் குறைந்து சிவாவின் உடல் நலம் நன்றாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை