உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி-கடலுார் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் :துணை ஜனாதிபதியிடம் எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

 புதுச்சேரி-கடலுார் ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் :துணை ஜனாதிபதியிடம் எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியை நிதி குழுவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஜனாதிபதியிடம் எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார். புதுச்சேரிக்கு வந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ் ணனை எதிர்கட்சி தலைவர் சிவா சந்தித்து அளித்த மனு: புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிக்குழுவில் சேர்த்து பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். மூடப்பட்ட பஞ்சாலைகள், சர்க்கரை ஆலை திறக்க அனுமதி யளித்து, மில்களை நடத்த நிதி வழங்கவேண்டும். சேதராப்பட்டு கரசூரில் கையகப்படுத்தப்பட்டுள்ள 800 ஏக்கர் நிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் துவங்கி வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு உதவ வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டும். சென்னை - மரக்காணம் - புதுச்சேரி - கடலுார் வழித்தடங்களை இணைக்கும் ரயில்வே திட்டம் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஆதாரத்தை ஏற்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம்-புதுச்சேரி-கடலுார் வழி ரயில் தடமும் நிலுவையில் உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பனித்திட்டு முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான கடற்கரைச் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் கோரிக்கையான தூண்டில் முள்வளைவு அமைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை