உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மழையால் பாதித்தவர்களுக்கு உணவு, மளிகை தொகுப்பு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

 மழையால் பாதித்தவர்களுக்கு உணவு, மளிகை தொகுப்பு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

x புதுச்சேரி: மழையால் பாதித்த மக்களுக்கு அரசு உணவு மற்றும் மளிகை தொகுப்பு வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: வங்க கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கினர். பேரிடர் மேலாண்மை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி, மீன்வளம், சுகாதாரம் போன்ற துறைகளின் செயலர்களை நேரிடையாக களத்தில் இறக்கி பணி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாமில் தங்க வைத்துள்ள மக்களுக்கு உணவு அளிப்பது மட்டுமின்றி வீட்டில் உணவு சமைக்க முடியாமல் முடங்கி கிடக்கும் மக்களுக்கும் உணவு வழங்க வேண்டும். மேலும், அரசு வழங்க வேண்டிய நிலுவை அரிசியுடன் மளிகை தொகுப்பும் உடனடியாக வழங்க வேண்டும். குடியிருப்புகளில் நீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற வேண்டும். மக்களுக்கு தரமான குடிநீர் கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும். தொற்று நோய் பரவாமல் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை