உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.சி.ஆரை சீரமைக்க மக்கள் நீதி மையம் கோரிக்கை

இ.சி.ஆரை சீரமைக்க மக்கள் நீதி மையம் கோரிக்கை

புதுச்சேரி: குண்டும் குழியாக உள்ள இ.சி.ஆரை விரைந்து சீரமைக்க வேண்டும் என, மக்கள் நீதி மையம் வலியறுத்தியுள்ளது.அதன் பொதுச்செயலாளர் சந்திரமோகன் விடுத்துள்ள அறிக்கை:கனமழையினால் பெரியக்காலாப்பட்டு இ.சி.ஆர் சாலை கந்தலாகி உள்ளது. பிள்ளைச்சாவடி முதல் கனகசெட்டிக்குளம் வரை இ.சி.ஆரில்., ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.இப்பள்ளத்தில் பைக் ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இப்பள்ளங்களை தற்காலிகமாக செங்கற்களை கொட்டி சரிசெய்து வருகின்றனர்.இந்த கற்களும் துாளாகி மீண்டும் ராட்சத பள்ளம் ஏற்படும். சிறிது கவனம் சிதறினாலும் கார் போன்ற இலகுரக வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.இதேபோல் பெரியக்காலாப்பட்டு - மாத்துார் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அச்சுறுத்தி வருகிறது. இச்சாலைகளை விரைந்து சீரமைக்க பொதுப்பணித் துறையின் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை