உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

 குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதி மொழி ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகத்தில், குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில்,குழந்தை திருமணத்தை தடுப்பதிலும், நாடு முழுதும் உள்ள இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 'குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா' என்ற தேசிய இயக்கத்தைநடத்தி வருகிறது. இதனையொட்டி, புதுச்சேரி அரசு தலைமைச் செயலகத்தில், குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேற்று நடந்தது.இதில், தலைமைச் செயலர் சரத் சவுகான், உறுதி மொழியை வாசிக்க,தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அரசு செயலர் முத்தம்மா, உறுதி மொழியை தமிழில் வாசிதார். நிகழ்ச்சியில், அரசு செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி