உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கல்லுாரி மாணவி மாயம் :போலீசார் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம் :போலீசார் விசாரணை

புதுச்சேரி: கல்லுாரி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, 19. இவர், லாஸ்பேட்டை அரசு பெண்கள் தொழில்நுட்ப கல்லுாரியில் பி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 17ம் தேதி காலை 7:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி