உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி: லாஸ்பேட்டை மோதிலால் தொழில்நுட்ப கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தலில் பயன்படுத்தக்கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கும், தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கும், லாஸ்பேட்டை மோதிலால் நேரு தொழில் நுட்பக் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படவுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தேர்தல் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன், கூடுதல் மாவட்ட  கலெக்டர் சுதாகர், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ