| ADDED : ஜன 27, 2024 06:26 AM
புதுச்சேரி : இந்துக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நிர்வாகிகள் சீனியர் எஸ்.பி., யிடம் மனு அளித்தனர்.மனுவில், ராமாயணம் இந்துக்களின் புனிதமான இதிகாசங்களில் ஒன்றாகும். இது தர்மமே வெல்லும் என்ற அடிப்படையில் இயற்றப்பட்டு உள்ளது. 500 ஆண்டுகள் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் நடக்கும் சமயத்தில், மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போல் திராவிட விடுதலைக் கழக விஷமிகள், சுவரொட்டி அடித்து புதுச்சேரி முழுதும் ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். இது இந்துக்களின் புனித நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதை ஒட்டிய திராவிட விடுதலை கழகம், சுவரொட்டியை பிரிண்டிங் செய்த அச்சக்கம், சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசன், செந்தில்குமரன் உட்பட பலர் உடனிருந்தனர்.