உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியூர் ராமச்சந்திரா பள்ளிக்கு முதல்வர் விருது

அரியூர் ராமச்சந்திரா பள்ளிக்கு முதல்வர் விருது

வில்லியனுார் : குடியரசு தின விழாவில் அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளிக்கு , முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது.அரியூர் இராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி கடந்த 2022-23ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்விற்கு பள்ளி சார்பில் அதிக மாணவர்களை அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கிராம பகுதியளவில் சாதனை படைத்தது.இந்த சாதனையை பாராட்டி குடியரசு தின விழாவில் கவர்னர் தமிழிசை , பள்ளி தாளாளர் சங்கரநாராயணிடம் 'முதலமைச்சர் விருது' மற்றும் சுழற்கேடையம் வழங்கி பாராட்டினர்.இது குறித்து பள்ளி சார்பில் நிர்வாகி ராம்பிரசாத் கூறியதாவது: எங்கள் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்விற்கு அதிக அளவில் மாணவர்களை அனுப்பி தொடர்ந்து கிராம பகுதியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறோம். பள்ளி ஆசிரியர்களின் உழைப்பிற்கும் அரசு கொடுத்துள்ள விருது எங்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ