மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
12 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
12 hour(s) ago
புதுச்சேரி, -கே.எஸ்.பி., அறக்கட்டளை மற்றும் என்.ஆர்.காங்., கதிர்காமம் தொகுதி சார்பில் பொங்கல் தின கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. சாலையில் நடந்த கோலப்போட்டியில், கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சண்முகாபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் உள்ள கலையரங்கில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கே.எஸ்.பி. அறக்கட்டளை தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கோலப்போட்டியில் முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம், 32 இன்ச் எல்.இ.டி. டி.வி, பட்டு புடவை, 2ம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், 32 இன்ச் டி.வி., பட்டு புடவை, 3ம் பரிசாக 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி நாணயம், பட்டு புடவை உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறுவர் பூங்கா திறப்பு
மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலையில் களம் காத்த கருமரியம்மன் கோவில் எதிரில் அமைந்துள்ள என்.ஆர்., சிறுவர் பூங்காவை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago