உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்

தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்

நெட்டப்பாக்கம் : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துணை சபாநாயகர் ராஜவேலு நிவாரணம் வழங்கினார்.நெட்பாக்ககம் அடுத்த கரையாம்புத்துார் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சரசு, 42; கூலித்தொழிலாளி. இவரது கூரைவீடு கடந்த 9ம் தேதி இரவு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்து வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தது.இதையடுத்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணை சபாநாயகர் ராஜவேலு அரிசி, பாத்திரங்கள், துணி, உள்ளிட்ட நிவாரணம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ