உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாசு வெடிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண் கண்ணாடி வழங்கல்

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண் கண்ணாடி வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெரா லிங்க் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தாசில்தார் அலுவலகம் மூலம் தீபாவளியை முன்னிட்டு குழந்தைகளுக்கான கண் கண்ணாடி வழங்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெரா லிங்க் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தாசில்தார் அலுவலகங்கள் மூலமாக 20 ஆயிரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண் கண்ணாடியை வழங்கப் படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துவக்க விழாவில், அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி வெங்கடேஷ், கருவிழியின் தலைமை மருத்துவர் ஜோஸ்பின் கிறிஸ்ட் ஆகியோர், உழவர்கரை நகராட்சி பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வழங்க 5 ஆயிரம் பாதுகாப்பு கண் கண்ணாடிகளை கலெக்டர் குலோத்துங்கனிடம் வழங்கினர். உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், கூட்டுறவு துறையின் கான்பெட் மூலம் உரிமம் பெற்று நிறுவப்பட்டுள்ள பட்டாசு கடைகளிலும் இக்கண்ணாடிகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப் படுகிறது. இந்த கண்ணாடிகளால் பட்டாசுகளில் இருந்து பறக்கும் துகள்கள், ஒளி தீவிரம், புகை மற்றும் பட்டாசுகளில் வெளியேறும் ரசாயன வாயுக்கள், திடீர் வெடிப்பு போன்றவைகளில் இருந்து கண்களை பாதுகாத்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை