உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கல்

மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கல்

பாகூர்: பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், சமக்ரா சிக்ஷா வழிகாட்டுதலின் படி, மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் பழனிசாமி, பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.ஏற்பாடுகளை, சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி, உடற்கல்வி ஆசிரியர் வசந்தராஜா, ஆசிரியர்கள் பிரபாவதி, சத்தியவதி, செல்வக்குமரன், தம்பி ராஜலட்சுமி, ரம்யா, மஞ்சு, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை