| ADDED : ஜன 29, 2024 04:30 AM
புதுச்சேரி : பிரதமருக்கு கருத்து தெரிவித்ததில் புதுச்சேரி ஐந்தாவது இடத்தில் பெற்றுள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா இணைய பக்கத்தில் 9 ஆயிரம் கருத்துகள் புதுச்சேரியில் இருந்து பிரதமருக்கு சென்றடைந்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் ஐந்தாவது மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது.15க்கும்மேற்பட்ட விக்சித் பாரத் நிகழ்சிகளில் பங்கேற்று இருக்கிறேன்.மத்திய அரசின் திட்டங்கள் கிராமப்புற பகுதிகளை அதிகம் சென்றடைந்துள்ளது.இலவச சிலிண்டர், இலவச வீடு கட்டும் திட்டம், விபத்து காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், இவைகள் மூலம் குறைந்தது குடும்பத்தில் ஒரு நபராவது இந்த திட்டத்தின்கீழ் பயனடைந்திருக்கிறார்கள்.ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் எளியவர்கள் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.புதுச்சேரியில் 1,93,000 தகுதியுடைய பயனாளர்கள் இருக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட 1,83,000 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.அதில் 69,000 பேர் பயனடைந்து இருக்கிறார்கள்.புதுச்சேரி போன்ற சிறிய மாநிலத்தில் இதன்மூலம் 69 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். புதுச்சேரியை சார்ந்த மக்கள் 1500 பேர் வெளி மாநிலங்கள் சென்று இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். மாதாந்திர ஓய்வூதியம் பெறும் வயதானவர்கள் பிரதமரின் மக்கள் மருந்தகத்தின் மூலம் குறைந்த விலைக்கு மருந்துகள் வாங்கி இதன் மூலம் அதிகம் பயனடைகின்றனர்.சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு ஏவி சாதனை படைத்திருக்கிறோம். இதுபோன்று பல்வேறு துறைகளில் இந்தியா சாதனைகளை படைத்திருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.