| ADDED : ஆக 28, 2026 06:44 PM
புதுச்சேரி: சபாநாயகரின் கருத்திற்கு அமைச்சர் நமச்சியாவம் கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜான்குமார் எம்.எல்.ஏ., பட்ஜெட் மானிய கோரிக்கையில் பேசும்போது ‘பா.ஜ., அனைத்து மாநிலங்களிலும் கண்களில் விரல்விட்டு ஆட்டுகிறார்கள். ஆனால் புதுச்சேரி முதல்வரை எதுவும் செய்யமாட்டார்கள். அவர் பக்திமான், அவர் மீது மதிப்பு வைத்துள்ளனர்’ என்றார். அப்போது குறுக்கிட்ட தற்காலிக சபாநாயகர் அன்பழகன். ‘முதல்வரிடம் பா.ஜ., ஜம்பம் பலிக்க வில்லை’ என்றார். குறுக்கிட்ட அமைச்சர் நமச்சிவாயம், ‘சபாநாயகரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் திரித்து சொல்கிறார். சபையை தவறாக வழிநடத்த கூடாது’ என்றார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் ‘உங்கள் கட்சிக்காரர் தான் பேசினார் என்றார். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம் ‘நாங்கள் எங்கள் கட்சி பிரச்னையை பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் கட்சி பிரச்னையை பாருங்கள்’ என்றார். அமைச்சர் நமச்சிவாயம் சபாநாயகரை கண்டித்ததால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.