மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
18 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
21 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
29 minutes ago
புதுச்சேரி : லாரி ஸ்டிரைக் நடப்பதால் அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்., செய்தித் தொடர்பாளர் வீரராகவன் கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. இந்த பிரச்னையால் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் நடப்பதையடுத்து கடலூர் பகுதியில் அரசு அதிகாரிகள் அவசரக் கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதே போன்று புதுச்சேரி அரசு, மளிகை, காய்கறி, சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
18 minutes ago
21 minutes ago
29 minutes ago