உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு

இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநில அமைப்பாளர் சத்தியவேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சத்தியானந்தம், ஜெகன், வீரசேகரன், சண்முகம், மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இந்திராநகர் தொகுதியில் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் உத்தரவுப்படி இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.படித்த இளைஞரை வேட்பாளரை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதாக கட்சியின் கட்சியின் மாநில அமைப்பாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்