உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கேரளா மீனவர் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை

கேரளா மீனவர் திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை

புதுச்சேரி: கேரளா மாநில மீனவர் திட்டங்களை புதுச்சேரியில் செயல்படுத்த வேண்டும் என அகில இந்திய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் தேசிய செயல் தலைவர் பெரியாண்டி அறிக்கை:கேரள மாநில அரசு மீனவர்களுக்கு இலவச வீடுகளை கட்டித் தருகிறது. ஆனால் புதுச்சேரியில் இதுபோன்று மீனவர்களுக்கான வீடுகட்டும் திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, புதுச்சேரி அரசும் மீனவர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.கேரளாவில் 10 பேர் கொண்ட குழு ஒன்றுக்கு 1. 56 கோடி மதிப்பிலான விசைப்படகு இலவசமாக வழங்கப்படுகிறது. 100 எப்.ஆர்.பி., போட்டுகளும் இலவசமாக வழங்கப் பட்டுகின்றன.இயந்திரம் வாங்க 30 ஆயிரம், வலைகள் வாங்க 10 ஆயிரம் வழங்கப் படுகிறது. மீனவர்களுக்கான விபத்துக் காப்பீடு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்துகிறது. இத்திட்டங்களை புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை