மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
11 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
11 hour(s) ago
பாகூர்: ராகுல் எம்.பி.,யின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்., சார்பில், புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கத்தில் மறியல் நடந்தது.ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் மோகன்தாஸ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மாநில செயலாளர் பாலமுரளி, பாலச்சந்தர், தொகுதி இளைஞர் காங்., தலைவர் வீர மணிகண்டன், தெற்கு மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் எத்திராசு, பாஸ்கரன், நாகப்பன், கலிவரதன், சரவணன், தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.ராகுல் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.இதனால், புதுச்சேரி - கடலுார் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
11 hour(s) ago
11 hour(s) ago