உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலையோர மரம் அகற்றம் : போலீசில் புகார்

 சாலையோர மரம் அகற்றம் : போலீசில் புகார்

பாகூர்: கன்னியக்கோவில் - பாகூர் சாலையில் பல வகை யான மரங்கள் உள்ளன. இந்நிலையில், அச்சாலையில் உள்ள தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு கம்பெனி அருகே சாலையோரமாக, இருந்த சவுண்டல் மரம், கடந்த சில நாட்களுக்கு முன், ஜெ.சி.பி., மூலமாக பிடிங்கி, அதனை அங்குள்ள குப்பை கிடங்கில் போட்டு மூடி உள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், புதுச்சேரி பொதுப்பணி துறையில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலை கோட்ட இளநிலை பொறியாளர் அர்ஜூனன், மரம் பிடிங்கி எறியப்பட்ட சம்பவம் குறித்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி