முழியன் குளம் சீரமைக்க ரூ.20 லட்சம் நிதியுதவி
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் முழியன் குளம் சீரமைக்கும் பணிக்கு, 20 லட்சம் ரூபாயை, சி.எஸ்.ஆர்., நிதி மூலம் தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது. தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில், 400 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த முழியன் குளம் உள்ளது. தன சுந்தரம்பாள் சாரிடபுள் சொசைட்டி மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சமுக அமைப்புகளின் நிதியுதவி மூலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி லுமினா டேட்டா மேட்டீக்ஸ் தனியார் கம்பெனி சார்பில், சி.எஸ்.ஆர்., நிதியுதவின் கீழ், ரூ. 20 லட்சம் ரூபாய், குளம் சீரமைக்கும் பணிக்கு வழங்கினர். பூரணாங்குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜெனோ மாறன், தங்க மணிமாறன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், தனியார் நிறுவனத்தின் துணை தலைவர் பியூஸ்குமார், தனசுந்தரம்பாள் சாரிடபுள் சொசைட்டி தலைவர் ஆனந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.