உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மோதல் தலைமை செயலர் ராஜிவ் வர்மா அதிரடியாக இடமாற்றம்

புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மோதல் தலைமை செயலர் ராஜிவ் வர்மா அதிரடியாக இடமாற்றம்

புதுச்சேரி : தொடர் மோதல் எதிரொலியாக புதுச்சேரி தலைமை செயலர் ராஜிவ் வர்மா அதிரடியாக சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சரத் சவுகான் புதுச்சேரி தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரியில் என்.ஆர் காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது.மாநிலத்தின் முதல்வராக ரங்கசாமி உள்ளார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி புதுச்சேரியில் நடந்தாலும், ஆட்சியாளர்கள் - அதிகாரிகள் இரு துருவங்களாக உள்ளன.முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பேச்சை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கேட்பதில்லை. மக்கள் நலம் சம்பந்தப்பட்ட கோப்புகளை அனுப்பினால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பல்வேறு கேள்விகளுடன் திருப்பி அனுப்பி விடுகின்றனர் என ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.தலைமை செயலர் ராஜிவ் வர்மா அரசுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் என ஆளும் கட்சி எம்.எல். ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.அன்மையில் நிதித் துறை செயலரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி தவிர்த்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இதை தலைமை செயலர் ராஜிவ் வர்மா, நிதித் துறை அமைச்சரும், முதல்வருமான ரங்கசாமியை கலந்து ஆலோசிக்காமல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது. தலைமை செயலரும் நேரடியாக முதல்வரிடம் வந்து விளக்கம் அளித்தார்.இதற்கிடையில் தொடர் மோதல், புகார் எதிரொலியாக புதுச்சேரி தலைமை செயலர் ராஜிவ் வர்மா சண்டிகருக்கு ஆலோசகராக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாச்சலபிரதேசத்தில் தற்போது பணிபுரியும் 1994 பேட்ஜ் அதிகாரி சத்ர சவுகான் புதுச்சேரியின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை இயக்குனர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.-

தொடரும் மோதல்

புதுச்சேரியில் தலைமை செயலர்கள் - ஆட்சியர்கள் இடையே தொடர் மோதல் தொடர்ந்து கொண்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தலைமை செயலராக இருந்த அஸ்வினிகுமார், அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்களுக்கு தடையாக இருப்பதாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முதல்வர் அறையில் நடந்த கூட்டத்தை தலைமை செயலர் தவிர்த்து வந்தார். மோதல் முற்றிய நிலையில் அப்போதை தலைமை செயலர் அஸ்வினிகுமார் மாற்றப்பட்டு, அருணாச்சல பிரசேதத்தில் பணி யாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜிவ் வர்மா நியமிக்கப்பட்டார். தற்போது அதே மோதல் போக்கில் தற்போதைய தலைமை செயலர் ராஜிவ் வர்மாவும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கலெக்டர் கோவாவிற்கு இடமாற்றம்

மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 13 ஐ.ஏ.எஸ்., அதி காரிகள், 17 ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் அதிரடி யாக இடமாற்றம் செய்துள்ளது. அதில் புதுச்சேரி கலெக்டர் வல்லவன் புதுச்சேரியில் இருந்து கோவாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மற்றொரு புதுச்சேரி ஐ.ஏ.எஸ்.,அதிகாரி சவுத்ரி அபிஜித் விஜய் சண்டிகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களுக்கு பதிலாக அருணாசலபிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரி தல்வாடு புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதேபோல் டில்லி ஐ.பி.எஸ்., அதிகாரி அஜித்குமார் சிங்கலா, அந்தமான் நிக்கோபார் தீவு ஐ.பி.எஸ்., அதிகாரி கலைவானன் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி