உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொத்தபுரிநத்தம் அரசு பள்ளியில் பாதுகாப்பு வேலி அமைப்பு

கொத்தபுரிநத்தம் அரசு பள்ளியில் பாதுகாப்பு வேலி அமைப்பு

திருபுவனை : கொத்தபுரிந்த்தம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடத்தில் பாதுகாப்பு கிரில் வேலி அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.திருபுவனை தொகுதி, கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டடத்தின் கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6.12 லட்சம் ரூபாயில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை கோட்ட செயற்பொறியாளர் சுப்பராயன், உதவிப்பொறியாளர் விக்டோரியா, முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு, இளநிலைப் பொறியாளர் கருணாகரன், தலைமையாசிரியர் லட்சுமிகாந்தம், ஒப்பந்ததாரர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை