உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டேபிள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி நடக்கின்றது

டேபிள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி நடக்கின்றது

புதுச்சேரி : அகில இந்திய டேபிள் டென்னிஸ், வாலிபால் போட்டியில் பங்கேற்பதற் கான வீரர்கள் தேர்வு முகாம் வரும் 11 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.அகில இந்திய சிவில் சர்வீஸ் டேபிள் டென்னிஸ் மற்றும் வாலிபால் போட்டிகள் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் புதுச்சேரி சிவில் ஊழியர்களும் பங்கேற்க உள்ளனர்.வீரர்கள் தேர்வு முகாம் அமலோற்பவம் ஆரம்ப பள்ளியில் வரும் 11ம் தேதி காலை 9.30 மணியளவில் நடக்க உள்ளது.இதில் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு இருபாலரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதேபோல் 30ம் தேதி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டிக்கு இருபாலருக்கும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு முகாமில் அரசு ஊழியர் கள் பங்கேற்கலாம் என புதுச்சேரி விளையாட்டு இயக்குனரகம் அறிவித்து, அனைத்து துறைகளுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ