உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுதானிய பயிற்சி முகாம்

சிறுதானிய பயிற்சி முகாம்

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகம் சார்பில், சிறுதானியங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஏம்பலம் கிராமத்தில் நடந்தது.கால்நடை மருத்துவர் செல்வமுத்து வரவேற்றார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் செந்தில்குமரன், சிறுதானியங்கள் எவ்வாறு பயிரிடுவது, அதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். பதப்படுத்தும் மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலர் சுமித்ரா சிறு தானியத்தில் இருந்து மதிப்பு கூட்டுதல், கேழ்வரகு நுாடுல்ஸ் ,கேழ்வரகு பிஸ்கட், தினை அல்வா, கம்பு அவள்,கேழ்வரகு லட்டு ஆகிய பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இப்பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் செய்திருந்தனர். உதவி வேளாண் அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ