உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாமல்லபுரத்திற்கு கடத்தப்பட்ட ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது ; 2 கார்கள் பறிமுதல்

மாமல்லபுரத்திற்கு கடத்தப்பட்ட ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது ; 2 கார்கள் பறிமுதல்

வானுார், : புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரத்திற்கு இரு கார்களில் கடத்தப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள உயர் ரக மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து சென்னை மாமல்லபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு உயர் ரக மதுபாட்டில்கள் கடத்துவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், சப் இன்ஸ்பெக்டர் இணையத் பாஷா, கோட்டக்குப்பம் மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பட்டானுார் நாவற்குளம் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அவ்வழியாக வந்த பி.ஒய்-05-இ-2000 பதிவெண் கொண்ட 'ஹூண்டாய்' காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீசார், காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அவர், புதுச்சேரி, கலைவாணன் நகர் செங்குட்டுவன் மகன் பாலமுருகன், 25; என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தி செல்வதை ஒப்புக் கொண்டார்.பிடிபட்ட கார் மற்றும் அவரது வீட்டில் இருந்த பி.ஒய்.01.சி.டி.8475 பதிவெண் கொண்ட எக்ஸ்யூவி - 500 காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் இரு கார்களையும் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்