| ADDED : மார் 17, 2024 05:16 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், மின்சாரம் தாக்கி, தந்தை கண் முன்னே மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.அரியாங்குப்பம், அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் இருசப்பன். அரியாங்குப்பம் பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மகன் முத்துகுமரன், 26; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டின் பின் பக்கத்தில், சுவரில் பூசு வேலை நடந்து வருகிறது. அப்பகுதி இருட்டாக இருந்ததால், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து ஓயர் மூலம் டியூப்லைட் இணைப்பு கொடுத்தார்.இந்நிலையில், கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்த பலகையை முத்துகுமரன் எடுத் தார். அப்போது, மின் ஒயரில் இருந்து மின்சாரம் அவரது காலில் பட்டு துாக்கயெறிப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அவரது தந்தை, அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இவருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். தந்தை கண் முன்னே மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.